Saturday, May 29, 2010

ஆணையிறவு மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலை. மாணவர் பலி

நேற்று அதிகாலை ஆணையிறவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட பொறியியற்துறை மாணவர் உயிரிழந்தார்.

பல்கலைக்கழக விடுமுறைக்காக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுக்கு வந்த இவர், கிளிநொச்சியில் உள்ள தனது சொந்த வீட்டைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சகோதரருடன் கிளிநொச்சி சென்றபோதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆணையிறவு சந்திப்பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளின் டயர் வெடிக்கவே அது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் மோதியது.

மோட்டார் சைக்கிளில் சென்ற பேராதனைப் பல்கலைகழக மாணவர் சுஜீவன்(வயது -22) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்து வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. வருந்துகிறேன் தோழர் ....
    மாதவ ராஜ் அவர்களின் பதிவு நினைவுக்கு வருகிறது கவி ....

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.