இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூனை இன்று சந்தித்தார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின் போது சிறிலங்காப் படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் பலவும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பான் கீ மூனை இன்று சந்தித்த போதே, இது குறித்துக் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தினை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ், நாட்டு மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற போரின் போது சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மனிதவுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.