Sunday, May 16, 2010

பொட்டு அம்மான் மரணத்தை கோத்தபாய உறுதி செய்கிராராம் ?

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது தேவைப்படுவது சாலைகள், மின்சாரம், குடிநீர், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவையே. அரசியல் மாற்றங்களை விட இவையே மக்களுக்கு முக்கியமாம் என்கிறார் அவர்.

மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றது போல கே.பி ஐக் கைதுசெய்ததும் மிக முக்கியமான விடயமாகும். கே.பி ஐ பிரபாகரன் மீண்டும் இயக்கத்தில் நியமித்த பின்னர் அவர்தான் புலிகளுக்கு வேண்டியவற்றைச் செய்து வந்தார்.
அவர் ஏற்பாடு செய்திருந்த ஆயுதக் கப்பல் வந்துகொண்டிருக்கையிலேயே போர் முடிவுக்கு வந்தது. இதனால் 2009, மே 20 ஆம் திகதி அன்று அந்த ஆயுதங்கள் கடலில் கொட்டப்பட்டன என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

கே.பி பிரபாகரனுடனும், சார்ளஸுடனும் மட்டும் தொடர்புகளை வைத்திருக்கவில்லை என்று கூறியுள்ள கோத்தபாய தற்போதைய நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டைத் தொடக்கி வைத்தவரும் கே.பி தான் எனத் தெரிவித்தார்.

மேற்கொண்டு பொட்டு அம்மான் பற்றிக் குறிப்பிட்ட கோத்தபாய, பொட்டு அம்மான் இறக்கவில்லை என பல செய்திகள் வந்தாலும், அவரது உடல் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கூட, நந்திக்கடலில் நடந்த இறுதிச் சமரில் அவர் இறந்துவிட்டார் என்பதற்கு மிகவும் நம்பிக்கைவாய்ந்த தகவல்கள் இருந்தன எனக் குறிப்பிட்டார்.

நந்திக்கடல் பகுதியில் ஏராளமான உடல்கள் அடையாளம் காணப்படவில்லையாம். அந்த அடையாளம் காணப்படாத உடல்களில் ஒன்று பொட்டு அம்மானுடையது என்று கூறுகிறார் கோத்தபாய.

ஏறத்தாள 1 வருடமாக பொட்டம்மானைப் பற்றி எதுவும் கூறாது மொளனம் காத்த கோத்தபாய தற்போது கூறியிருக்கும் கருத்துக்கள் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.