நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் எனக்குக் கிடைத்த அமோக வெற்றி புலம் பெயர் மக்கள் சுதந்திர தமிழீழத்திற்குக் கொடுத்த ஆணையாகும். இதற்கு வாக்களித்த மக்களுக்கு தலைசாய்த்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லண்டன் வடமேற்கில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்று முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் எனக்காக வாக்களித்த மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு கிடைத்த வெற்றி என்பது அது எனக்கான தனிப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை. நான் கொண்டுள்ள உறுதியான கொள்கைக்கும் தமிழ் தேசியத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தமிழ் இறைமை என்பதற்கு புலம் பெயர் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நான் தாயகத்தில் வாழும் மக்களின் மீள்குடியேற்றம் உட்பட அவர்களின் அமைதியான சகஐ வாழ்க்கைக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதோடு போர் குற்றச் செயல்களை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதுடன் தாயகக் கொள்கையை விட்டுக் கொடுக்காது எமது இலட்சியமான தமிழிழம் என்ற இலக்கை அடைய உறுதியோடு செயற்படவுள்ளேன்.
இவ் உயரிய கொள்கையுடன் செயற்பட உள்ள என்னைத் தெரிவு செய்த எனது அன்பான மக்களுக்கு நான் தலைசாய்த்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.