Tuesday, May 04, 2010

பிரித்தானியாவில் தேர்தல் முடுவுகள் தேர்தல் ஆனையகத்தால் அறிவிப்பு

பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிவுகளை இன்று 03-05-2010 திங்கட்கிழமை மதியம் ஒரு மணிக்கு தேர்தல் ஆணையகத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து லண்டன் சொரஸ்ரியன் சென்ரர் மண்டபத்திற்கு இரவு 10:30 க்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டு அங்கு மக்கள் முன்னிலையில் இரவு 11:30 முதல் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமானது.

வாக்குகள் எண்ணிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சில குழப்பநிலை காரணமாக வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக எந்தவித அறிவித்தல்கலையும் விடாது தேர்தல் ஆணையகம் அனைத்து வாக்களிப்பு நிலையங்களின் முடிவும் வரும் வரை பொறுமை காத்தது.

இரவிரவாக தொடர்ச்சியாக எண்ணப்பட்டு வந்தபோதிலும் லண்டனுக்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்குகளின் எண்ணிக்கையும் இன்று காலை 11:45 மணிக்கே முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் லண்டன் தவிர்ந்த ஏனைய பிரித்தானிய பிரதேசங்களின் வாக்குப்பெட்டிகள் இன்று காலை 09:15 மணிக்கு பின்னரே வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்கு வந்திருந்தது. அதன் பின்னர் அந்த வாக்குப்பெட்டிகளில் இருந்த வாக்குகலை எண்ணும் பண்ணியை ஆரம்பித்தனர்.

ஆனால் வாக்குப்பெட்டிகளை திறந்து வாக்குகள் எண்ண ஆரம்பித்த அலுவலகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது மூன்று பிரிவுகளை சேர்ந்த மூன்று வெவ்வேறு வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்ட போது அதில் அதிகலவான வாக்கு மோசடி இடம்பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடன் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையாளர் அங்கு பண்புரிந்தவர்களுடனும் ஆலோசித்து பின்னர் மோசடிசெய்யப்பட்ட வாக்குப்பெட்டிகளுக்குரிய வாக்குகள் மட்டுமன்றி லண்டன் தவிர்ந்த ஏனைய பிரித்தானிய பிரதேசங்களின் வக்குகள் அனைத்தும் செல்லாது எனவும், அப்பிரதேசங்களில் மீள் வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வாக்குகளின் எண்ணிக்கையையும், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்களையும் தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளிற்கிணங்க தேர்தல் கண்காணிப்பிற்கு பொறுப்பாக நின்ற அதிகாரி அறிவித்தார். தெங்கிழக்கு லண்டன் முடிவுகள் இன்னும் இருபத்தினான்கு மணித்தியாலங்களுக்குள் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

வடமேற்கு லண்டன்

01) சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி -8377 வாக்குகள்

02) டிலக்சன் மொறிஸ் - 6444 வாக்குகள்

03) பாலாம்பிகை முருகதாஸ் - 5879 வாக்குகள்

04) லலிதசொரூபினி பிரதீபராஜ் - 5521 வாக்குகள்

05) ஜெயவாணி அச்சுதன் - 5446 வாக்குகள்

வடகிழக்கு லண்டன்

01) ஆறுமுகம் ஆர்த்தி - 4154 வாக்குகள்

02) மகேஸ்வரன் சசிதர் - 3796 வாக்குகள்

03) ஹவிராஜ் சண்முகநாதன் - 3758 வாக்குகள்

04) செல்லத்துரை செல்வராஜா - 3296 வாக்குகள்

05) முருகவேள் ஹரன் - 2641 வாக்குகள்

தெங்கிழக்கு லண்டன்

01) மனோரஞ்சன் நிக்லஸ் (தேர்தல் நடைபெறாது போட்டிகள் இன்றி தெரிவானவர்கள்)
02) சுரேந்திரன் ஜனார்த்தனன் (தேர்தல் நடைபெறாது போட்டிகள் இன்றி தெரிவானவர்கள்)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.