சிறிலங்காவின் அரசியலமைப்பில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுமென சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவாக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ் மாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இரண்டு தடவை மட்டுமே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற விதி முதற்கட்டமாக மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்து கேள்விகளுக்கு பதிலளிக்க கூடியவாறும் இச்சட்டவிதிகள் மாற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இவ் உத்தேச மாற்றங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக பதவியேற்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி கொண்டுள்ள அதிகாரங்களில் சிலவற்றை நீக்கும் விதிகளும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களும் இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு மாற்றங்களில் இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் இறுதிக்கட்டமாக மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான எவ்வித யோசனைகளையும் இவ் அரசியமைப்பு மாற்றங்கள் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.