Thursday, April 22, 2010

யாழ் குடாநாட்டில் கப்பம் பெறும் குழுவினரால் பயன்பட்டதாக நம்பப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது: அங்கிருந்த இருவர் மீட்கப்பட்டனர் மூவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் ஆட்களைக் கடத்திக் கப்பம் பெறும் குழுவினரால் பயன்பட்டதாக நம்பப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரிடம் இருந்து இந்த வீடு வாடகைக்கு பெற்றுக் கொண்டதாக தெரிய வருகின்றது. வர்த்தக நோக்கங்களுக்காக என தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் எனக் கூறியே குறித்த வீட்டைப் பெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படகிறது.

நேற்றைய தினம் சுண்டிக்குளிப்பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்க மறுக்கின்ற போதிலும் மூன்றுபேர் இந்த வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அயலவர்களின் தகவல்களின் பிரகாரம் பகல்வேளைகளில் இந்த வீட்டில் நடமாட்டம் இல்லாதிருந்ததாகவும் இரவில் வாகன நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவற்துறையினர் தற்பொழுது இந்த வீட்டைக் கண்காணித்து வருகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.