பிரான்ஸ் நாட்டுப் பிரஜையாகிய ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் போன்று போலியான கடிதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புதன்கிழமை மாலை ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதியூடாக வடபகுதிக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறிப்பிட்ட இந்த வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் கடிதத்தைப் போன்ற போலியாகத் தயார் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றைக் கொண்டு ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டபோதே இராணுவத்தினர் இவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து முச்சக்கர வண்டியில் சென்ற போதே இவர் ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வரும் இவர் மேல் விசாரணைக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் ஏ9 வீதியூடாகப் பிரயாணம் செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலமாக வெளிநாட்டவர்கள் சென்று வருவதற்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.