Monday, April 19, 2010

யாழ்.பஸ் நிலையத்தில் சாரதியின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

திருகோணாமலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணம் கோண்டாவில் பஸ் சாலையைச் சேர்ந்த சாரதியின் அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்றது.

பஸ் விபத்தில் கொல்லப்பட்ட இணுவிலைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை மெசியாசின் இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இவரது சடலம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு மக்களினதும் ஊழியர்களினதும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல நூற்றுநுக்கணக்கான மக்களும் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.