அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணிச்சல்மிக்க பெண்மணிக்கான விருதுக்கா க இலங்கையைச் சேர்ந்த ஜென்சிலா மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்காக முன்னின்று சேவை யாற்றியமைக்காக இவருக்கு இந்த சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொண்டலிஸா ரைஸினால் ஆரம்பிக்கப்பட்ட துணிச்சல்மிக்க பெண்களுக்கான வருடாந்த விருதுக்காக இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட 10 பேரின் பெயர்களை தற்போதைய இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண் டன் திங்களன்று அறிவித்தார். உலகளவில் பெண்களுக்காக குரல்கொடுத்த மற்றும் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெண்களே இவ்விருதுக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமது சொந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து வேறொரு பிரதேசத்தில் வசித்து வரும் ஜென்சிலா மஜீத், சிறுபான்மையினருக்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்ட புத்தளம் பிராந்திய சக நம்பிக்கை நிதியத்தின் நிருவாக நம்பிக்கையாளராக திகழ்கின்றார். இந்நிதியம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெண்கள் உரிமை, சமாதானத்தை கட்டியெழுப்புதல், கண்ணி வெடி அபாய அறிவூட்டல் ஆகிய விடயங்க ளில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப் பிட்டுள்ளது.
கடந்த 20 வருடங்களாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் இவர், 1992ஆம் ஆண்டில் மேலும் 5 பேருடன் இணைந்து இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பித் தார். அன்று ·தல் இடம்பெயர்ந்த முஸ்லி ம், தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும் அந்த சகங்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கும் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க திணைக்களம், உணர்ச்சிகரமான, அரசியல்மயப்படுத்தப் பட்ட சூழலில் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான பரந்துபட்ட அமைப்பொன்றை உருவாக்க ஜென்சிலா பாடுபட் டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.