எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனது இந்திய விஜயத்தை இடை நடுவில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க இன்று இரவு கொழும்பைச் சென்றடைவார் என எதிர்பர்க்கப்படுகிறது.
ஜெனரல் பொன்சேகா, கைது செய்யப்பட்டதாக அறிந்தவுடன் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பத் தீர்மானித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சட்டவல்லுனர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்திற் கொண்டு ரணில் தனது இந்திய விஜயத்தை ரத்து செய்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.