இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பொலிஸார் சித்திரவதை செய்யும் நடவடிக்கைகளில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதில் உயர்நீதிமன்றத்தின் அடிப்படை உரிமை மீறல் தீர்ப்புகளையும் மீறி இந்த சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
பொலிஸார், சட்டம் ஒழுங்குகளை மீறிச் செயற்படுகின்ற சந்தர்ப்பங்கள் பல்வேறு வேளைகளில் இடம்பெற்றுள்ளன.
நீதிமன்றங்கள் இந்த குற்றங்களுக்கு எதிராக தண்டனைகளை வழங்கியுள்ள போதும் அந்த குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை என மனித உரிமைகள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சமந்தி ஜெயமான்ன தலைமையிலான 6 பேரடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள 50 பக்கங்களை கொண்ட அறிக்கையிலேயே இந்தக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.