எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அழைத்து சரத் பொன்சேகா கைது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
கைது தொடர்பில் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே. க்ரம்லி, ஜாலிய விக்ரமசூரியவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையின் சட்ட விதிகளுக்கு அமைவாகவே ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
எந்த சட்டத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் விளக்கப்பட வேண்டுமென க்ரம்லி தெரிவித்துள்ளார்.






Sarath was arrested under"Mahinda brothers law". No one has right to be against them. sathi
ReplyDelete