வன்னியில் இறுதிவரை நின்று மக்களுக்கு பணிசெய்த மருத்தவர்கள் ஐவர் சிறீலங்காப் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்களால் அறுவைச்சிகிச்சைகள் மேற்கொண்டார்கள்.
இன்நிலையில் வன்னியில் முள்ளிவாய்கால் வரை மக்களுக்கு மருத்துவம் செய்ததற்காக அரசாங்க மருத்துவர்கள் சிறீலங்காப்படையினரல் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பின்பு சிறீலங்காப்படையினரின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இவர்கள் நிபந்தனைகளில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதாவது மருத்துவர்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் வாரம் தோறும் காவல் துறையில் ஒப்பம் இடவேண்டும், என்ற கடடுப்பாடுடன் இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
மருத்துவர்கள் மீதான வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நடைபெற்று வந்துள்ளநிலையில் நேற்று இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கவில்லை என்ற காரணத்தினால் கொழும்பு உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இதில் மருத்துவர்களான சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா, இளஞ்செளியன், வல்லவன் மற்றும் மருத்துவ உதவியாளர் கோதீஸ்வரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







இன்னும் சிவபாலன் என்ற மருத்துவரை விடுதலை செய்ய வில்லை.
ReplyDelete