சிறீலங்காவின் இன்றைய தேர்தல் களத்தில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் சில அவசரமாக நிறைவேற்றப்பட்டும் வருவதை யாவரும் அறிவோம் ஆனால் பல ஏமாற்று வித்தைகள் இடம் பெறுவதை யாரும் அறிவதுமில்லை அப்படியான சில விடங்களை அறிந்தவர்கள் வெளியில் சொல்வதுமில்லை காரணம் எல்லாம் ஒரு சுயநலம்தான். சிறீலங்காவின் தேர்தலிலும் சரி அரசியல் ஆட்சியிலும் சரி பொருளாதாரத்திலும் சரி சிங்களதேசத்தின் உறக்கத்திலும் அவர்களின் கூடவே சுற்றி தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஒட்டுக்குழு வம்சத்துக்கும் சரி தமிழர்களின் போராட்டமே ஜீவனோபாயம் .விடுதலைப்புலிகளே அவர்கள் யாவருக்கும் படியளக்கும் தெய்வங்கள்.
சிங்கள மற்றும் தமிழ் மாற்று கருத்து ஊடகங்களுக்கு கூட இற்றைவரை காலமும் வாழ்கைகொடுத்துக் கொண்டிருப்பது தமிழர் போராட்டம்தான் என்பதில் எவ்வித சந்தேகவுமில்லை. இன்றுவரை ஒரு சிங்கள குழந்தை சாப்பிட அடம்பிடித்தால் புலிவருகின்றது என்று சொல்லியே உணவு ஊட்டுகின்றனர் சிங்களத் தாய்மார் என்பதில் எதுவும் மிகையில்லை .அதைவிட தமிழ்தேசியத்தை ஏற்றுகொண்ட தமிழர்கள் வாழ்விலும் புலி என்ற சொல் .ஒரு குழந்தைபிறந்து அம்மா என்று சொல்கின்றதோ இல்லையோ ஆனால் நிச்சயம் அது புலி என்று சொல்லும் எனும் அளவிற்கு புலிகளின் செல்வாக்கும் அவர்களின் கொள்கைகளும் தமிழ்மக்களின் மத்தியில் ஆழமாக வேரூன்றி நிற்கின்றது என்று சொல்வதிலும் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமிருக்க வாய்ப்பில்லை.
இதனால்தான் இப்போதைய சிறீலங்காவின் தேர்தல் களத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் களத்தில் இறக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. விடுதலைபுலிகள் சொல்வதைதான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மட்டுமில்லை மலையகத்தமிழர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சிறீலங்காவிற்க்கு மட்டுமில்லை உலகமும் கூட அறிந்த விடயம் இதை கணக்கு கூட்டித்தான் மகிந்தா தலமையிலான சிங்கள அரசியல் பீடம் கைதுசெய்யப்பட்டு தடுப்பு முகாங்களுக்குள் அடைபட்டிருக்கும் முன்னாள் போராளிகளை தேர்தல் களத்தில் இறக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் அறுவடை செய்ய நினைக்கின்றது.
இந்த நரித்தனமான சிங்களத்தின் திட்டத்துக்கு தூண்டில் போட களத்தில் இறங்கியுள்ளார் விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும்
தற்போதைய ஓட்டுக்குழுக்களின் பிரதாணியும் சிறீலங்காவின் அமைச்சருமான வினாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா. இவர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுள்ள முன்னாள் விடுதலைப்புலி போராளிகளில் முக்கிய சிலரை அதாவது வடக்கு கிழக்கு மக்களால் நன்கு அறியப்பட்டவர்களை மகிந்தாவிற்க்காக பிரச்சாரம் செய்யும்படியும் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் வெளிநாடுகளில் சென்றுவசிப்பதற்க்கான சகல ஏற்பாடுகளும் செய்து தருவாதாய் ஆசைகாட்டி வருகின்றார் கருணா.
இதன் ஒரு கட்டம்தான் அவசர அவசரமாக மகிந்தவின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பு மற்றும் குறிப்பிட்ட போராளிகளின் விடுதலை, ஆனால் தமிழர் தரப்பு போராளிகளின் புனர்வாழ்வு மக்களின் மீள்குடியேற்றம் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகள் முட்கம்பிச்சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் எம் உறவுகளின் விடுதலை என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துதான் இரண்டு பிரதான சிங்கள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர் தமிழர் தரப்பின் கோரிக்கைகளுக்கு தலையும் செவியும் சாய்க்கமுடியாது ஆனால் எமக்கு ஆதரவு தரவேண்டும் என்று நவீன துட்டகைமுனு இலக்கம ஒன்று அதாவது மகிந்தா தமிழ்ர்தரப்புக்கு வேண்டுகோள் அல்லது கட்டளையிட்டது .இதேசமயம் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தலைசாய்க்கமுடியாது ஆனால் செவிசாய்கின்றோம் என்று நவீனதுட்டகைமுனு இலக்கம் இரண்டு அறிவித்தது அதவது சரத்பொன்சேகா தரப்பு .தமிழர்தரப்பிற்க்கு வேறு தெரிவு இருக்கவில்லை.
ஒன்று மகிந்த சொல்வதைகேட்டு கொடுப்பதை வாங்குவது இல்லை பொன்சேகா அணியிடம் நூறுகேட்டு ஜம்பதையாவது பெற்றுக்கொள்ள முயற்சிப்பது - அல்லது சிலர் சொல்லது போல மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு வாக்களிப்பது அதாவது கருணரட்ன விக்கிரமபாகு அல்லது ஒரு சுயேச்சை வேட்ப்பாளருக்கு ஆதரவு தருவது அல்லது தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது இதில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது அல்லது தேர்தலை புறக்கணிப்பது என்பது தமிழர்களின் இப்போதைய பிரச்சனைக்கு தீர்வு எதனையும் கொடுக்கப்போவதில்லை .அதற்க்காக தூரநோக்கு சிந்தனை என்பது தவறு என்று சொல்லவே அல்லது தமிழ்தேசியத்தை ஏற்றுகொள்ளாமலே இந்த முடிவுக்கு தமிழர்தரப்பு வரவில்லை.
ஒரு விடயத்தை நாம் சரிவர புரிந்துகொள்ளவேண்டும் நான் சாகலாம் ஆனால் நாங்கள் சாகக்கூடாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இப்போது தமிழர்கள் நாம் இருக்கின்றோம் தமிழன் என்ற ஒரு இனம் இருந்தால் மட்டுமே தமிழீழம் நோக்கி பயணிக்கமுடியும் அப்படியானால் இப்போது நாய்யுடன் கூட்டுவைத்தாலும் நரியுடன் மாலைமாற்றிக்கொண்டாலும் சரி தமிழ் மக்கள் காப்பற்றப்படவேண்டும் தடுப்புமுகாங்களில் உள்ள போராளிகள் விடுவிக்கப்படவேண்டும் மக்கள் அதிக காலம் அகதிமுகாங்களில் வாழ்வதை தடுக்க வேண்டும் அகதி முகங்களில் மக்களின் வாழ்க்கை தொடருமானால் எமது இனத்தின் பண்பாடுகள் கலச்சாரங்க|ள் யாவும் அழிக்கப்பட்டு மந்தைகளை விட கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள் அல்லது தள்ளப்படூவோம் இந்த அவசர தேவைகளை நிறைவு செய்ய தமிழர்தரப்பு எடுத்திருக்கும் முடிவுகள் சரியானவையாகவே இருப்பதுபோல இருக்கின்றது.
தமிழர்தரப்பு மேற்கொண்ட நகர்வுகள்தான் இப்போது அவசர மீள்குடியேற்றம் போராளிகளின் விடுதலை ஆகியன மகிந்தா செய்யவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார் ஆனால் மீள் குடியேற்றம் என்று சொந்த இடங்களுக்கு அனுப்படும் இடங்களில் மிதிவெடிகள் கண்னிவெடிகள் வெடிக்காத வெடிப்பொருட்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகள் எல்லாம் காடுகள் மண்டி இருகின்றது மண் அணைகள் ஆங்காங்கு காணப்படுவதால் குளம் போல நீர் தேங்கி நிற்கின்றது வவுனியாவின் பிரதான முகாங்களில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட மக்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லை பெரும்பாலன மக்கள் வன்னியில் உள்ள அரச கட்டடங்களில் தங்கவைக்கப்படுள்ளனர் அங்கும் முட்கம்பி வேலிகள் இட்டு மக்கள் வெளியே செல்லமுடியாதபடி இராணுவ காவல் போடப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க விடுதலைப்புலிகளின் போராளிகளை விடுதலை செய்வதாய் சொல்லிக்கொண்டு சிறீலங்காக அரசங்கம் குறிப்பிட்ட ஒரு தொகுதி முன்னாள் போராளிகளுக்கு கருணா மற்றும் டக்ளஸ் போன்றவர்களால் தயார் படுத்தப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்ட அளவானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் இதற்கு ஒரு காரணம் இருக்கின்றது அது என்ன வென்றால் இரண்டு பிரதான சிங்கள கட்சிகளும் யுத்ததின் வெற்றியை காட்டி தேர்தலில் வெற்றி பெற முனைப்புடன் இருப்பதால் மகிந்தா ஒரு மாற்று வழியை கையாள நிணைக்கின்றார் அதற்க்கு கருணா தலைமையேற்று இருக்கின்றார் இதில் மகிந்தவும் கருணாவும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பறிப்பதற்க்கு முயற்சிக்கின்றனர்.
அது எவ்வாறு ஏனில் அவசரமாக விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளைக்கொண்டு சிங்கள மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது அதில் மக்களுக்கு உயிர்சேதம் ஏற்ப்படத படி இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் தக்குதலுக்கு சென்ற அதவது ஏற்பாடு செய்யப்பட்ட போராளிகள் மீது இராணுவத்தை கொண்டுதாக்குதல் நடத்தி அவர்களை கொள்வது இதன் மூலமாக புலிகள் இன்னும் அழிக்கப்படவில்லை. சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்துகின்றனர் என்று சொல்வதின் ஊடே பொன்சேகாவின் வெற்றி என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளிவைப்பதுடன் தமிழர்களின் வாக்குக்கு குறிவைத்து விடுதலைசெய்யப்பட்ட போராளிகளை ஒழித்துக்கட்டுவதுடன் மீண்டும் புலி புரளியைகிளப்பும் சிங்களமக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதும் தடுப்பு முகாம்களில் இருக்கும் போரளிகளை நிரந்தரமாய் சிறைவைப்பது இல்லை.
நிரந்தரமாய் ஒளித்துகட்டுவது மீள்குடியேற்றம் பற்றிக்கதைக்கும் உலக நாடுகளை இன்னும் பயங்கரவாதம் சிறீலங்காவில் இருப்பதாய் காட்டி தமிழர்களை நிரந்தர சிறையில் அடைத்து பேரினவாதிகளுக்கு உற்சாகமூட்டவும் மகிந்தா சிந்திக்கின்றார்.மகிந்த சமைக்கும் அரசியல் சோற்றிற்க்கு கருணா அடுப்பு எரிக்கின்றார் டக்கிளசும் மற்றும் சில தமிழ் அரசியல்வாதிகளும் விறகெடுக்கின்றனர் . இதைப்புரிந்து கொண்டு செயற்ப்படவேண்டிய கடமை தமிழ்மக்களின் பொறுப்பு.
பாமினி






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.