புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இவ்வருடம் மே மாதம் இறுதிச் சமர் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்துக்கு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்து, அங்கு படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியைத் திறந்து வைத்தார்.
இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை, புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டை ஒன்றுபடுத்திய படை வீரார்களின் பெருமையை என்றும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது
இந் நினைவுத் தூபி, ஆயுத கிளர்ச்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிக்குமே ஒழிய, அதனை தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதை குறிக்கும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்தப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நினைவிடம் ஒன்றை அமைப்பது குறித்தும் தான் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நினைவுத்தூபி திறப்புவிழா நிகழ்வில் ஐனாதிபதியுடன், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைகளின் பிரதானி சீவ் ஏயார் மார்ஷல் ரொசான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, கடற்படைத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.












0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.