தமிழர்கள் தமது பகுதிகளில் அதிகாரத்தைச் செலுத்த மாகாண சபைகளுக்கு அப்பால் அரசியல் அதிகாரம் வழங்குக பேராசிரியர் மல்கம் ரஞ்சித் வலியுறுத்துதினார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகத் தமது குரலை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் தாங்களே தங்களது பகுதிகளைப் பிரதி நிதித்துவம் செய்யவேண்டும். அரசு மாகாண சபைகளை விட அவர்க ளுக்கு அதிகமாக உரிமை வழங்கவேண் டும். இது தமது பகுதிகளில் தாங்களே அதி காரத்தை செலுத்தும் நிலையை அவர்க ளுக்கு வழங்கும்.
இவ்வாறு வலியுறுத்தி உள்ளார் கொழும்புப் பேராயர் மல்கம் ரஞ்சித்.
கிறிஸ்தவ இணையத்தளச் செய்திச் சேவையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
தசாப்தகால யுத் தத்தில் இரு தரப்புகளும் தவறு செய்ததை ஏற்றுக்கொள்வது முக்கியமானது.
ஒரு தரப்பு புனி தமானது. மற்றைய தரப்பே குற்றவாளி எனச் சொல்வதற் கான தருணம் இது வல்ல. இரு தரப்பும் குற்றவாளிகள். அவை தவறு இழைத் திருக்கின்றன. இலங்கை அரசை இனப்பிரச்சினையை அரசியல் தீர்வின் ஊடாகத் தீர்க்கு மாறு மதத்தலை வர் கள் வலியுறுத்த வேண்டும். நாங்கள் மீண்டும் வன் முறைக்குத் திரும்ப முடியாது. இரு சமூகங்க ளைச் சேர்ந்தவர்களும் தம் மத்தியில் உள்ள தீவிரவாத சக்திகளை எதிர்த்திருந்தால் யுத்தத்தைத் தவிர்த்திருக்கலாம்.
தமது நிலைப்பாடுகளிலிருந்து சிறிதளவு விட்டுக்கொடுப்புகளைச் செய் வதற்குத் தயாராக இருந்திருந்தால் பாரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கும்.
கிறிஸ்தவ மதகுருமார்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் எவரும் அதனை செவிமடுக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பல உள்ளன. தமிழர்கள் மீண்டும் செல்லவிருக்கும் சில பகுதிகள் கண்ணிவெடிகளால் நிறைந்துள்ளன. இதன் காரணமாக அவர்கள் காயமடையலாம் அல்லது அதைவிட மோசமாக ஏதாவது இடம்பெறலாம். இவ்வாறு ஏதாவது இடம்பெற்றால், மரணத்தை நோக்கித் தள்ளியதற்காக சர்வதேச சமூகம் எம்மைக் கண்டிக்கும். இதன் காரணமாக அப்பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லாத நிலையை உருவாக்கவேண்டும்.
சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் அரசுக்கு உதவ வேண்டும். நிலக்கண்ணி வெடிகளைத் துரிதமாக அகற்றுவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் உதவவேண்டும் என்றார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.