பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும், இலங்கையின் கிழக்கில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஓர் அமைப்பு பற்றிய பெயர் விபரங்கள் கூட தமக்குத் தெரியாது என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் டொக்டர் அன்வர் அல் அஹா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமக்கு மிக நெருங்கிய பிணைப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.