Thursday, December 03, 2009

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் செல்வாக்கு அதிகம்..? : புலனாய்வுப் பிரிவினர் இரகசியக் கருத்துக் கணிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பேராதரவு யாருடைய பக்கம் உள்ளது என்பதைக் கண்டறியும் விதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் அரச புலனாய்வுப் பிரிவினர் கருத்துக் கணிப்பீடு ஒன்றை அண்மைய நாட்களில் மேற்கொண்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரகசிய அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்கள்.

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்கவால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த இரகசிய அறிக்கையின்படி 53 சதவீதமான இலங்கையர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், 46 சதவீதமான இலங்கையர்கள் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகாவின் செல்வாக்கு நகரப் பகுதிகளில் ஓங்கிக் காணப்படுகிறது என்றும் கிராம மக்களின் விருப்பத்துக்குரிய தெரிவாக மஹிந்த ராஜபக்ஷ உள்ளார் என்றும் அதில் கோடிகாட்டப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறித்து பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே இக்கருத்துக் கணிப்பீடு இடம்பெற்றுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரும் மக்கள் யாருடைய பக்கம் என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் கருத்துக் கணிப்பீடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் அப்போது மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு 60 சதவீதமாக இருந்தது என்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் கசிந்துள்ளன.

எது எப்படி இருப்பினும் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என பொன்சேகா உத்தியோகபூர்வமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ள நிலையில், மக்களின் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும், தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கான மக்கள் செல்வாக்கில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படத்தான் செய்யும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.