தமிழீழ விடுதலைப்புலிகளின் 600 வங்கிக் கணக்குகளைப் பெற வேண்டுமானால், ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்கின்ற பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என சிங்கப்பூரைத் தளமாக கொண்டியங்கும் பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தமீழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் கே. பத்மநாதன் ஆகியோர், பொன்னையா ஆனந்தராஜாவுடன் இணைந்தே நிதிவளங்களை கையாண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் உள்நாட்டு செயற்பாடுகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டாலும், சர்வதேசத்தில் அதன் செயற்பாடுகள் முடக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கே. பத்மநாதன் விடுதலைப் புலி நிதி மூலங்களின் சிறுபகுதியையே கட்டுப்படுத்தியவராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புலிகளின் பாரிய நிதி வளங்களை கையாளும் ஆனந்தராஜா, ஐயா, ராஜா, அய்யண்ணா ஆகிய பெயர்களை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர், கனகராஜா ரவிசங்கர் என்ற சங்கிலியுடன் இணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சங்கிலி என்ற ரவிசங்கரே, தமக்கு (விடுதலைப் புலிகளுக்கு) சொந்தமான எம்.வி. ஓசியன் லேடி என்ற கப்பலின் ஊடாக 76 விடுதலைப் புலி உறுப்பினர்களை கனடாவுக்கு கடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.