தமிழீழ தேசத்தின் காவற்தெய்வங்களை நெஞ்சில் நிறுத்திப் பூசிக்கும் தேசிய நினைவெழுச்சி நாளை 27.11.2009 வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி நடவடிக்கைகளில் சில நாசகார சக்திகள் இறங்கியுள்ளன.
குறிப்பாக, தேசிய நினைவெழுச்சி நாள் 28 ம் நாளன்று இடம்பெறக்கூடும் என்று ஒருபுறமும், தேசிய நினைவெழுச்சி நாள் மண்டபத்தில் நுழைவுக்கட்டணம் அறவிடப்படும் என்று மறுபுறமும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான செல்பேசிக் குறுந்தகவல்களும், இணையவழிக் கருத்தாடல்களும், செவிவழி வதந்திகளும், திட்டமிட்ட வகையில் நாசகார சக்திகளால் பரப்பப்பட்டு வருகின்றன.
தேசிய நினைவெழுச்சி நாள் என்பது தமிழீழ தேசத்தின் ஆன்மாவில் ஒன்றிக்கலந்துவிட்ட ஓர் உன்னத நிகழ்வு. இந்த வகையில் வழமையான ஒழுங்கமைப்புக்களுடன், எவ்விதமான நுழைவுக்கட்டணமும் இன்றி, திட்டமிட்டபடி 27ஆம் நாளன்று எக்செல் மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதை எமது உறவுகளுக்கு அறியத் தருகின்றோம்.
இதனைக் குழப்பும் வகையில் நாசகார சக்திகளால் பரப்பப்படும் வதந்திகளை கவனத்திற்கொள்ள வேண்டாம் என்றும் எமது உறவுகளை அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு www.tnrf.co.uk /0203 137 1139 /email: tnrf.co.uk@gmail.com
ஒருங்கிணைப்புக் குழு
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்
25.11.2009
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.