தடுப்புமுகாங்கள் அனைத்தும் திறந்து விடப்படும் என சிறீலங்கா ஐனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
இன்று வவுனியா செட்டிக்குளத்தில் அமைந்துள்ள இராமநாதன் தடுப்பு முகாமில் உள்ள இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அனைத்து தடுப்பு முகாங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை அனைவரும் எதிர்வரும் சனவரி 31 ஆம் நாளுக்குள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
எதிர்வரும் டிசம்பர் 1ஆம் நாள் தொடக்கம் தடுப்பு முகாங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் சுத்திரமாக நடமாடுவதற்கு முகாங்கள் திறந்துவிடப்படும். அங்கு எந்தவிதமாக கெடுபிடிகளும் இடம்பெறமாட்டாது.
இடம்பெயர்ந்த 280,000 ஆயிரம் மக்களில் 50 விடுக்காட்டினரை மீளக்குடியமர்த்தியுள்ளோம். தற்போது மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவு 50ஆயிரமாக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என பசில் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
நிகழ்வில் அமைச்சர்களான றிசாத் பதியூதீன், பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி , வன்னிக் கட்டளைத் தளபதி ஆகியயோர் கலந்துகொண்டுள்ளனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.