தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினால் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளை முன்னிட்டு கூறியுள்ளதாவது,
தமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் மாவீரர் தினம் என்பது வரலாற்று மிக்க நிகழ்ச்சியாகும். புரட்சி போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள். என்றைக்கும் நினைவுகூற வேண்டியவர்கள். இந்த மாமனிதர்களாககிய மாவீரர்களுக்கு நாம் எடுக்கக் கூடிய விழா இந்த உலகத்தில் என்றைக்கும் மறையாது என்பதை காட்டும். தமிழக மக்ககளுக்கு மாவீரர் தினம் இரண்டாம்பச்சம் தான்.
ஆனால் ஈழத்தமிழர்களுக்கு அது ஒரு மதிப்பு மிக்க நாள். இந்த நாளில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நானும் கலந்து கொள்கிறேன் என்றார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.