இலங்கை வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று புத்தள துன்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வான்படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த உலங்கு வானூர்தி, தற்போது எரிந்த வண்ணம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்
மாவீரர் தினமான இன்று இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியுள்ளது, சில சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. உண்மையில் இது பறப்பில் ஈடுபடும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பதில் சந்தேகம் நிலவுகிறது
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.