Thursday, November 26, 2009

வீரத் தமிழன் சீமான் கனடாவில் போலீசாரால் கைது!

மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான்,

பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.

பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.

ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.

(2ம் இணைப்பு)

சற்று முன்னர் கிடைத்த தகவல்படி, உணர்வாளர் சீமானவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டதாகவும், தாம் அவரைக் கைதுசெய்யவில்லை, விசாரணைக்காகவே அழைத்துச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்தும் விசாரிக்கப்படு வருவதாகவும். அவரை தடுத்துவைத்து , நாடு கடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இன்று இரவு நடைபெறவுள்ள நிகழ்வில் சீமான் நடத்த உள்ள பேச்சுக் குறித்தும், அங்கு கூடவுள்ள மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் அவரது சட்ட வல்லுநர்களுடனும் கலந்துரையாடவே கனடிய போலீசார் சீமானை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் கூறுகின்றது.

நேற்றைய தினம் மாணவர் நிகழ்வொன்றில் சீமான் அவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியிருந்தார். இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய இலங்கை அரசு, சில ஆதாரங்களைத் திரட்டி கனடிய பொலிசாரிடம் கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவில் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் மற்றும் இன்று நடைபெற இருந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கில் இலங்கை அரசும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கைக்கூலிகளுமே இவ்வாறு ஒரு ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் மாவீரர் தினம் நடைபெற உள்ள இந்தவேளையில் இதனைக் குழப்பும் நோக்கில் இவ்வாறான செயல்களில் அந்நாட்டு அரசாங்கங்களைத் தூண்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது.  கனடா போன்ற பேச்சு, ஜனநாயகச் சுதந்திரம் மிக்க நாட்டில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைப்போரை கைது செய்வது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகும். அத்துடன் விசாரணை என்ற போர்வையில் இவர்கள் வாயை அடைக்க அரசு முயல்கிறது என்பது வருந்தத்தக்க விடையமாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.