வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை – எங்கள்
தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை.
தேசம் மீட்க படை கட்டிய வீரன்.திக்குகள் எங்கும் தமிழர்க்கு முகவரி தந்தவன்.
முப்படை அமைத்து முத்தமிழ் காத்தவன்.
எப்படை வந்திடினும் எதிர்கொள்ளும் மாவீரன்.
காலம் பிரசவித்த எங்கள் காவலன்.
கரிகாலன் பெயர்கொண்ட வானவன்.
55 வது அகவை காணும் எங்கள் இனத்தின் ஒளி விளக்கே பல்லாண்டு காலம் வாழ்க.
ஈழத் தமிழர் வரலாற்றில் இருவர் என்றுமே இறப்பதில்லை ஒருவர் எல்லாளன் மற்றவர் பிரபாகரன். எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைத்த பொழுதில் கருவுற்றவர் பிரபாகரன்.
தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இன்று ( 26.11.2009 ) தனது 55 வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். யுத்தகளத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார் என்ற தகவலை பலர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அவர் வருவார் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகள் அபிமானிகளிடையே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் போராட்ட வாழ்வைப் படித்து போர்க்களத்தில் நுழைந்த பிரபாகரனின் வரலாறும் நேதாஜியின் கடைசிக்கால வரலாறு போலவே ஆகியிருப்பது ஆச்சரியம் தரும் உண்மையாக இருக்கிறது. இன்றும்கூட நேதாஜி வாழ்வதாகவும், அவர் வருவார் என்றும் அவ்வப்போது பலர் பேசுவதுண்டு. அதுபோல பிரபாகரனும் வருவார் என்ற நம்பிக்கை தமிழீழ ஆதரவாளரிடையே நிலவுகிறது. அவருடைய 55 வது பிறந்த தினத்தில் அவர் மறுபடியும் மக்கள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையே எங்கும் மேலோங்கி நிற்கிறது. அவர் வரவேண்டும் தமிழினம் மகிழ வேண்டும் என்ற ஆசையையை அவரது பிறந்தநாள் வேண்டுதலாக முன் வைக்கிறோம்.
பிரபாகரன் தேடப்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நடமாடிய ஒருவரல்ல. எதிரிகளும், ஆதரவாளரும் அவரைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே தேடக்கிடைக்காத வைரம் போலவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. வருடத்தில் ஒரு தடவை மாவீரர்நாள் நிகழ்விற்கு அவர் மக்கள் முன் தோன்றிப் பேசுவார். அடுத்த வருடம்வரை அதுதான் அவருடைய பிரதான பிரசன்னமாக இருக்கும். அவருடைய உரை சிங்கள ஆட்சியாளராலும், இந்திய ஆட்சியாளராலும், சர்வதேச சமுதாயத்தாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். உலகத்தில் அவருடைய உரையைப் போல உன்னிப்பாக நோக்கப்படும் வருடாந்த உரையை நிகழ்த்தும் உலகத் தலைவர்கள் எவருமே இருந்தாக சரித்திரமே கிடையாது. அப்படிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்கொண்ட உலகின் ஒரேயொரு தலைவராக அவர் இருந்தார்.
பிரிட்டனின் பிரபல ஊடகமான பீ.பீ.சி உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப்படை வீரனாக அவரையே தேர்வு செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்களத்தில் இருந்த ஒரு படையணி பெருந்தொகையான கப்பல்கள், ஆகாயவிமானப்படை, கரும்புலிகள் அணி, போலீஸ்படை, போராட்டப்படைகள், பெண்புலிகள் என்று கட்டமைத்த இராஜ்ஜியம் உலகத் தலைவர்களின் தன்மானத்திற்கே ஓர் அடியாக இருந்தது.
ஓயாத அலைகள் 3ன்போது அவர் சிறீலங்கா படைகளை பலாலி முகாமிற்குள் முற்றாக முடக்கி முழுமையான வெற்றியை எட்டித் தொட்டிருந்தார். மற்றய நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைய மனிதாபிமானத்தோடு 40.000 சிங்களப் படைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார். சிங்களப் படைகள் தமிழ் மண்ணில் செய்த செயல்களை எண்ணினால் காயப்பட்ட அவர்களை அன்றே புல்டோசர்களை ஏற்றி நெரித்து இன்று சிங்களப் படைகள் செய்த செயலை அவராலும் செய்திருக்க முடியும். ஆனால் அவர் மனிதாபிமானத்திற்காகவும் உலக சமுதாயத்திற்காகவும் அதைத் தவிர்த்தார்.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் தனி ஒரு மனிதனாக உலகத்தின் 32 நாடுகளை எதிர் கொண்டார். அன்று போராட்டத்தை ஆரம்பித்தபோது 32 தமிழ் இயக்கங்களை எதிர் கொண்டவர் இப்போது அதேயளவு வல்லரசுகளை எதிர் கொண்டார். சங்கிலியனோ, பண்டாரவன்னியனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, கடைசிச் சோழனோ எதிர் கொள்ளாத பெரும் சவால் இதுவாகும். கடந்த 2000 வருட வரலாற்றில் உலகப்போரை தனிமனிதனாக சந்தித்த ஒரேயொரு வீரத்தமிழனாகவும் அவர் விளங்கினார்.
அவர் போரில் தோற்கடிக்கப்பட்டார் என்பது தவறான கருத்தாகும். உலக நாடுகளின் அசிங்கங்களையும், பொறாமை மனங்களையும் பார்த்தால் பிரபாகரன் தோல்வி மூலம் தமிழினத்திற்கு மாபெரும் வெற்றியையே தேடித்தந்துள்ளார்.
சென்ற ஆண்டு மாவீரர்நாள் உரையைப் பார்த்தால் அவரே இதைச் சொல்லியிருப்பதை உணரலாம். ஒரு சிறிய மக்கள் குழுவை எதிர்க்க இவ்வளவு பெரிய வியூகத்தை உலகநாடுகள் அமைப்பதா என்ற கேள்வியை ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டிருப்பார். அன்றே அவருக்கு யாவுமே தெரிந்துவிட்டது, அவருடைய மெல்லிய நமட்டு சிரிப்பிற்குள்ளேயே அது கிடந்தது.
பிரபாகரன் தனது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிப் படிப்பித்தார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, அவருடைய மகள் அல்லாத டென்மார்க்கில் இருந்த ஒரு பெண்மணியின் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். தனது பிள்ளைகள், பெற்றோர், குடும்பம், தான் என்று அனைவரையும் களத்தில் வைத்தே அவர் போரை நடாத்தியிருக்கிறார் என்ற உண்மையை இப்போது நயவஞ்சக எதிரிகள் மௌனமாக சிந்திக்கிறார்கள்.
எதிரிகள் மட்டும் பிரபாகரனுக்கு எதிராகப் போராடவில்லை. ஈழத் தமிழரே பல பிரிவுகளாகப் பிரிந்து அவருக்கு எதிராகப் போர் நடாத்தினார்கள். அவரோடு இருந்தவர்களில் பலர் பணத்திற்காக இருந்தவர்கள் என்பதையும் இப்போது அறிகிறோம். ஆனால் அவருக்காக தமது பணத்தை எல்லாம் கொடுத்த ஏழைகளின் இதயத்தில் பிரபாகரன் இருந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போல ஏழைகளின் அன்பைப் பெற்ற தலைவராக இருந்தார்.
எம்.ஜி.ஆர் ஒரு கருத்தை எப்போதும் சொல்வார். என்.டி.ராமராவை காட்டிக் கொடுத்த பாஸ்கரராவைப் போன்ற துரோகிகளை பக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுவார். அதுபோல பிரபாகரனும் பலரை வெளியில் விட்டால் ஆபத்தென அருகில் வைத்திருந்தார் என்பதை இப்போது அனைவரும் உணர்கிறோம். இப்படியாக உள்ளிருந்து ஆப்பு வைத்தவர்கள் பற்றிய கதைகள் மேலும் வரும். சென்ற மாவீரர் நாள் உரையில் அவர் அதிகமாக பாவித்த சொல் ஆப்பு வைத்தல் என்பதுதான். உள்ளிருந்து ஆப்பு வைத்த அனைவரையும் அவர் அறிந்திருந்தார். காலம் அந்தக் கதைகளின் உண்மையை விடுவிக்கும்.
பிரபாகரன் என்பவர் வாழ்ந்துதான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய ஒருவரல்ல. அவருடைய சக்தி தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்துள்ளது. ஆகவே மாவீரர்நாளில் பிரபாகரன் உரையாற்றவில்லையே என்று மக்கள் கவலையடைதல் கூடாது. அவர் சிங்கள இனவாதத்தை மட்டுமல்ல, உலக இனவாத வெறுப்பையும் தமிழருக்கு அம்பலப்படுத்தியுள்ளார். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் விக்கிரமாதித்தன் சாதிக்க முடியாத சாதனையை 55 வருடங்களில் சாதித்துள்ளார்.
இயேசுநாதர், நெப்போலியன், மகாஅலக்சாண்டர் போன்ற பெரிய வீரர்கள் எல்லாம் இன்றுவரை இறந்து போகாத புகழ் மனிதர்களே. அவர்களைப் போல அழியாப் புகழ் பெற்றுவிட்ட பிரபாகரன் இன்று உலகப்; புகழ் ஏணியில் நிற்கிறார். இன்று அவரது பிறந்தநாள்! இதுதான் இனி ஈழத் தமிழினத்தின் பிறந்தநாள்.
ஈழத் தமிழர் வரலாற்றில் இருவர் என்றுமே இறப்பதில்லை ஒருவர் எல்லாளன் மற்றவர் பிரபாகரன். எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைத்த பொழுதில் கருவுற்றவர் பிரபாகரன். அவருடைய கண்களும் எல்லாளன் கண்களும் ஒன்றுதான்.
பிரபாகரன் இறப்பதில்லை வருவார் !
கொஞ்சம் பொறுங்கள் !
இன்று அவர் பிறந்தநாள் விழாவை அவர் இறக்கவில்லை என்ற உறுதியுடன் அனைவரும் கொண்டாடுவோம்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.