Tuesday, November 24, 2009

ஜனாதிபதித் தேர்தலில் பொதுச்சின்னத்தில் களமிறங்க சரத் பொன்சேகா இணக்கம்


ஜனாதிபதித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளின் சின்னங்களைத் தவிர்த்து பொதுச் சின்னத்தில் போட்டியிட சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட பொதுச்சின்னத்தில் சரத் பொன்சேகா போட்டியிட உள்ளார்.

ஜே.வி.பி. புதிய கட்சியொன்றைப் பதிவு செய்து சின்னம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சியொன்றை பதிவு செய்ய விண்ணப்பத்திருந்த போதிலும் தேர்தல் ஆணையாளர் அதனை நிராகரித்ததை தொடர்ந்து பொதுவேட்பாளரைக் களமிறக்கும் பொதுச் சின்னம் தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் பொதுச் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட பின்னர், சரத் பொன்சேகாவின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் ஆகியன குறித்து அறிவிக்க எதிர்க்கட்சிகள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.