Tuesday, November 24, 2009

கிழக்கு மாகாண சபையின் 2010 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு


கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நேற்று மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சபை முதல்வர் ஏ.எம்.எம்.பாயிஸ் தலைமையில் சபை கூடிய போது 2010 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபையின் 2ஆவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

நேற்றைய முதல் நாள் விவாதத்தின் போது ஆளுனர் செயலகம் ,பேரவைச் செயலகம் ,மாகாண சேவை, பொதுக்குழு, மற்றும் முதலமைச்சர் செயலகம், ஆகியவற்றிற்கான வரவு செலவுத்திட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

இதில் குறிப்பாக முதலமைச்சர் செயலகத்திற்குள் உள்ளுராட்சி திணைக்களம், கிராமிய அபிவிருத்தி உல்லாசம், மீள்குடியேற்றம் போன்ற அமைச்சுக்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரும் குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சருமாகிய சிவநேசத்துரை சந்திரகாந்தன் வரவு செலவுத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து அதற்கான அங்கிகாரத்தை கோரியிருந்தார்.

இது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆளுனர் செயலகம் பேரவைச் செயலகம் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தொடர்பான வரவு செலவுத் திட்ட அறிக்கையும்; ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றும் நாளையும் தொடர்ந்து ஏனைய அமைச்சுக்கள் மீதான விவாதம் சபையில் இடம்பெறவிருக்கின்றது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.