தற்போதைய காலகட்டத்தில் அரசுத் தலைவர் பதவிக்கு திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்துவதை தாம் எதிர்ப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இருந்த போதிலும், அரசாங்கம் எமது கோரிக்கையைக் கவனத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு தேர்தலுக்கான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டால், அவ்வாறான தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகவும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அதேவேளையில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட அரசுத் தலைவர் பதவிக்கு தாம் எதிரானவர்கள் எனவும் தெரிவித்த ரில்வின் சில்வா, அந்தப் பதவியை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.