[சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2009]
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறிலங்கா அரசு வெற்றிகரமாக தோற்கடித்ததற்காக அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினால் கொழும்பு இலக்கு வைக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
அந்த அனைத்துலக குழுவினரும் உள்ளூரில் உள்ள சிலரும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைப் பற்றி இலகுவில் மறந்து விட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனத்தினர், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் அனைவரும் அண்மையில் மேற்கொண்ட அறிக்கைகளைக் குறிப்பிட்டுக் கூறிய அவர், இவை அனைத்தும் சிறிலங்காவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பெரியளவிலான பரப்புரை நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் என்றார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளால் நாட்டிற்கு இருந்த அச்சுறுத்தல் போன்றே இதுவும் மிகவும் அச்சுறுத்தலான விடயம் எனவும், இந்த நடவடிக்கைக்கு ஊடகங்களின் ஒரு பகுதியும் உடந்தையாக இருக்கின்றது எனவும் கோத்தபாய கூறினார்.
இலங்கையில் வெற்றிகரமாக இடம்பெற்ற போர், அனைத்துலக சமூகத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதிதான் எனவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
புலிகள் படைத்துறை ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அந்த அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்த அனைத்துலக வலையமைப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வது மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த அரச தலைவர் தேர்தலின்போதும் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையை பாதிக்கும் வகையில் அமெரிக்க செனட்டில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டதாக அரச தரப்பு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரன முனைகளில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளும் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலை இலக்கு வைத்து அரசின் உறுதித் தன்மையைக் குலைக்கும் நோக்குடனேயே மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.