[திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2009,]
வடக்கு கிழக்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள முப்படை முகாம்கள் எந்த காரணத்திற்காகவும் அகற்றப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியேற்ற வேண்டும் எனவும், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
Monday, September 14, 2009
வடக்கு கிழக்கில் உள்ள முப்படை முகாம்கள் அகற்றப்பட மாட்டாது: ஜனாதிபதி
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.