"மீள்குடியேற்றம் அங்கு இல்லை. இது ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு மாற்றப்படுவதைப் போன்றது" எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருக்கும் மாவை சேனாதிராஜா, 10 ஆயிரம் பேர் கடந்த வாரம் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அவர்கள் மெனிக் பாம் முகாமில் இருந்து மாற்றப்பட்டு வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவுக்கு விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இருந்த போதிலும் இவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் அந்தப் பகுதியில் உள்ள முகாம்களிலேயே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
இதேவேளையில் மெனிக் பாம் முகாம்களில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 10 ஆயிரம் பேரில் 45 வீதமானவர்கள் மட்டுமே வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் ஒரு தொகையினர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.