[ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009]
நீண்ட கால இடைவெளியின் பிற்பாடு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத் தாபனத்திற்கு கடந்த சனிக்கிழமை பேட்டியளித்த இராசையா இளந்திரையன் அவர்கள் ஞாயிறு காலை சிறீலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளமும் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் கடந்த வாரம் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தரையிறக்க முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதில் எட்டு இராணுவக்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இம் முயற்சி கடற்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது வலிந்த தாக்குதலை தற்காத்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலைமைத்துவத்தால் வலிந்து தாக்குதற்குரிய தள மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
External Links:
ATBC:
ATBC interview with Ilanthirayan on 09 May 2009
Monday, May 11, 2009
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் படுகாயம்
Monday, May 11, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.