[ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009] இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சோனியா காந்தி இப்போதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இனி எந்தக் காலத்திலும் அவர் தமிழகத்திற்குள் நுழைய முடியாது என்று தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா எச்சரித்திருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைத் தடுக்கத்தவறிய சோனியா காந்தி, தமிழர்களின் வாக்குகளைக் கேட்டு சென்னைக்கு வருவதைக் கண்டித்து பல இடங்களில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் பழ.நெடுமாறன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா ஆற்றிய உரையில் மேலும் தெரித்துள்ளதாவது: ஒரு நரியின் குணத்துடன் தமிழ் இனத்தை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் சோனியா காந்திதான் போரை நடத்திக்கொண்டிருக்கிறார். லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு கொன்று குவிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கான பெண்கள் தாலியை இழக்கின்றனர். ஹிட்லர் காலத்தில் நடந்ததைவிட மிக மோசமான இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையை உலகமே தட்டிக் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஒப்பாரி ஓலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்றுவரை கேட்கவில்லை. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்காக சோனியா காந்தி இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இலங்கையில் போரை நடத்துவதே சோனியா காந்தி என்பதால்தான் அவர் தமிழர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார். இலங்கைத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் சோனியாவைக் கண்டித்து நாங்கள் ஜனநாயக வழியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். ஆனால், சோனியா காந்தியோ கொல்லைப்புறம் வழியாக உலங்குவானூர்தி மூலம் தீவுத்திடலுக்குச் செல்கிறார். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இலங்கையில் மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அங்கு உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய சோனியா நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் இனி எக்காலத்திற்கும் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியாது. இலங்கையில் நடைபெற்று வரும் போரால் தமிழகம் இழவு வீடாக மாறிவிட்டது. ஆனால் இங்கு பாயாசம் கேட்பதற்காக சோனியா காந்தி வருகிறார். அவர் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்" என்றார் அவர்.
Monday, May 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.