[புதன்கிழமை, 13 மே 2009,] சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உள்ளுர் பணியாளர் ஒருவர் இன்று புதன்கிழமை மதியம் பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் மேற்கொண்ட ஷெல்த்தாக்குதலில் பலியாகியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை இந்தச்சம்பவத்தில் மேற்படி பணியாளரின் தாயாரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன கருத்து தெரிவிக்கையில், பாதுகாப்பு வலயத்தில் தற்போது சேவையாற்றும் ஒரே ஒரு அமைப்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கமே உள்ளதென்றும், அங்கு தொடர்ந்தும் செஞ்சிலுவைத் தொண்டர்கள் பணியாற்றிவருவதாகவும், இன்று இடம்பெற்ற ஷெல் வீச்சில் 31 வயதுடைய சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உள்ளுர் பணியாளர் ஒருவர் பலியானதுடன் அவரது தாயாரும் இறந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Wednesday, May 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.