[வியாழக்கிழமை, 28 மே 2009]
வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகோப் கெலன்பேர்ஜர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை. எனவே உதவிப்பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
மருத்துவ தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளன. மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மருத்துவ தேவைகள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் சில முகாம்களுக்கான அனுமதிகளையே வழங்கியுள்ளது.
நாம் எல்லா முகாம்களுக்கும் பயணம் மேற்கொள்வதுடன், அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட வேண்டும். எமது முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிகளை வழங்க வேண்டும். நாம் அரசாங்கத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.
படை நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் மூன்று லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 500 பேரை கடந்த மாதம் நாம் பார்வையிட்டிருந்தோம் என்றார் அவர்.
Thursday, May 28, 2009
இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி வேண்டும்: அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்
Thursday, May 28, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.