Wednesday, May 13, 2009

சிறீலங்கா அரசாங்கத்தின் கூற்று பொய்யாகிவிட்டது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

[புதன்கிழமை, 13 மே 2009,] மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் கனரக ஆயுதத் தாக்குதல்களை நடத்த மாட்டோம் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்த கூற்று பொய்யாகிவிட்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. அண்மையில் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட செய்திமதிப் படங்கள் மூலம் கனர ஆயுதங்கள் மூலம் அகோர தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் நடத்துவதை இப்படங்கள் உறுதி செய்கின்றது. மருத்துவமனைகள் சிறீலங்காப் படையினர் தாக்குதல்களை நடத்துவதற்கு அவர்களே பொறுப்புக்கூற வேண்டும். 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 30 மருத்துவமனைகள் மீது சிறீலங்காப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.