Friday, May 01, 2009

வன்னி நிலை பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும்: டேவிட் மிலிபான்ட் தகவல்

[வெள்ளிக்கிழமை, 01 மே 2009] வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு விவாதத்துக்குள்ளாக்கப்படும் என பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கான தனது ஒருநாள் பயணம் முடித்துக்கொண்டு லண்டன் திரும்பியுள்ள அவர், நேற்று வியாழக்கிழமை பி.பி.சி.யின் 'வேல்ட் அற் வன்' (World at One) நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கின்றார். இந்த போர் பிராந்திய மற்றும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் அது தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியன அழுத்தம் கொடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "பாதுகாப்பு வலயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி உண்மையில் பாதுகாப்பானதாக இல்லை. அந்தப் பகுதியில்தான் போர் நடைபெறுகின்றது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்தப் பகுதி மீது தாக்குதல் நடத்தப்படாது என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார். அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், உண்மையில் ஐரோப்பிய ஒன்றியமும், ஜ-8 நாடுகள் அமைப்பும் போர் நிறுத்தம் ஒன்றைத்தான் கோரியிருந்தன" எனவும் அவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.