Tuesday, May 05, 2009

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் 74 வாக்குகளால் நிறைவேறியது

[செவ்வாய்க்கிழமை, 05 மே 2009] தமிழர்களை கைது செய்வது கடத்துவது மற்றும் காணாமல் போவது போன்ற சிறிலங்கா படையினரினதும் ஆயுதக் குழுக்களினதும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு துணை புரியும் அவசரகாலச் சட்டம் 74 வாக்குகளினால் மேலும் ஒரு மாத காலத்திற்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு கூடியது. வழமையான நாள் பணிகள் முடிவடைந்ததும் குறித்த பிரேரணையை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சமர்ப்பித்தார். இதனை அடுத்து விவாதம் தொடங்கியது. அரச தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் உரையாற்றினர். சபாநாயகரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிற்பகல் 4:30 நிமிடத்தில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பெறப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே எதிராக வாக்களித்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.