"முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.
களமுனையில் உள்ள இராணுவத் தளபதிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்த கோதாபாய ராஜபக்ச, அந்தப் பகுதி மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த கோத்தபாய ராஜபக்ச, ஏப்ரல் 20 ஆம் நாள் நடத்தியதைப் போல புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதற்கும் அதன் மூலம், அங்குள்ள மக்களை வெளியே கொண்டு வருவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் கவனம் முழுமையாக தேர்தலின் பக்கம் திரும்பியிருக்கும் நிலையைப் பயன்படுத்தி மிகவும் குறுகிய நிலப்பரப்பாக இருக்கும் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கப் படைகள் தயாராகி வருகின்றன. இந்தப் பகுதியில் தற்போது ஒன்றரை இலட்சத்துக்கு அதிகமான மக்கள் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.