[செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2009]
இந்தியாவின் உள்நாட்டு அமைச்சர் ப.சிதம்பரம் மீது கட்டை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் மீண்டும் சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாட்டில் சிதம்பரம் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே கட்டை வீச்சு இடம்பெற்றுள்ளது.
பெரியார் நகரைச் சேர்ந்த 35 அகவையுடைய சாயல்ராம் என்கிற ராமு திடீரென எழுந்து இலங்கை பிரச்சனைக்கு முடிவு என்ன? இலங்கை தமிழர்களுக்கு பதில் சொல் என சிதம்பரத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.
உலக தமிழர்களின் தலைவன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க என கோஷம் எழுப்பியவாறு சிதம்பரத்தை நோக்கி சாயல்ராம் கட்டையை வீசினார். எனினும் கட்டை சிதம்பரம் மீது படவில்லை.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சாயல்ராமை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை மன்னித்து விட்டு விடும்படி ப.சிதம்பரம் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டபோதும், தமிழகக் காவல்துறையினர் சாயல்ராமை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அத்துடன் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸார் சாயல்ராம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.