Wednesday, April 22, 2009

இலங்கை விவகாரம் குறித்த ஐ.நா.வின் அறிக்கையை கோரியுள்ள பிரான்ஸ்

[புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009] இலங்கை அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது. இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரிட்டனின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார். இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்ஸே அந்தரங்க கூட்டத்தில் கோரியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் டேஸ் பிறவுண் நியூயோர்க் சென்றிருக்கிறாரா? என்று பிரிட்டிஷ் நிரந்தர பிரதிநிதி ஜோன் சவேர்ஸிடம் கேட்டபோது அவர் ஆம் என்று பதிலளித்தார். திங்கட்கிழமை மதியமளவில் பிறவுண் பாதுகாப்பு சபைக்கு செல்லவில்லை. ஆனால், நம்பியாரிடமிருந்து அறிக்கையை பெறுவது என்பதே சபை உறுப்பினர்களின் பொதுவான நோக்கமாக இருந்தது என்று பாதுகாப்பு சபைத் தலைவரான மெக்ஸிகோவை சேர்ந்த குளோட் ஹெலர் தெரிவித்தார். இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்பது எங்களுக்கு தெரியும் என்று குறிப்டபிட்ட அவர் அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு என்றும் கூறினார். இலங்கை விவகாரத்தை விசேடமானது என்று கோடி காட்டியமை வட இலங்கையின் கரையோரத்தில் இரத்தக் களரிக்கு பாதுகாப்புச் சபை கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. மேற்கு சூடான் பிராந்தியமான தர்பூரில் இடம்பெறும் சிறுசிறு சண்டைகள் பற்றி பாதுகாப்பு சபையில் பல கூட்டங்களை நடத்தி ஆராயும் போது இலங்கையில் சிவிலியின்கள் நிறைந்து காணப்படும் பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிருந்து விலக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை நடைபெற்ற அந்தரங்க ஆலோசனைகளின் போது உரையாற்றிய சீனப் பிரதிநிதி, விடுதலைப்புலிகள், சபைக் கூட்டத்தில் தங்கள் விவகாரம் எடுத்துக் கொள்ளப்படுவதை பயன்படுத்தி தங்களை சட்டபூர்வ அமைப்பு என்று கூற முயல்வார்கள் என்றும் சபை அது பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார். இது இலங்கை அரசாங்கத்தின் நேரடிவாதமாகும். உதாரணமாக, சூடான் நீதியையும் சமத்துவ இயக்கத்தையும் பலப்படுத்துவது தொடர்பாக வெற்றி பெறாமல் முன்னேறியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேவேளை, தூதுவர் ஹெலர் குறிப்பிட்டது போன்று இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்று கூறினார். திங்கட்கிழமை விடுதலைப்புலிகளை விமர்சித்து பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் யுத்த சூனிய பிரதேசத்தில் யார் பயங்கர ஷெல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதென தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நம்பியார் திரும்பும் வரை பாதுகாப்பு சபையில் அறிக்கையை வெளியிட முடியாததால் நம்பியார் எங்கே இருக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் வினவியது. நம்பியார் நியூயோர்க் திரும்பும் வழியில் இந்தியாவில் தரித்து நிற்பதாக இன்னர் சிற்றி பிறெஸ்ஸுக்கு தெரிவிக்கப்பட்டது. நம்பியார் செவ்வாய் காலையில் நியூயோர்க் திரும்பிவிடுவார் என்று பான் கீ மூனின் அலுவலகம் தெரிவித்த போதிலும் புதன்கிழமைக்கு முன் அவர் திரும்ப மாட்டார் என்று பாதுகாப்பு சபை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் காலக்கெடு முடிவடைந்து 24 மணித்தியாலத்தின் பின்னரே இலங்கை பற்றிய அறிக்கை வெளியிடப்படும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.