Wednesday, April 22, 2009

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு நாம் முழுமையான ஆதரவுகளை வழங்குகின்றோம்: சீனா

[புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009] தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணிநேர அவகாசம் கொடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நேபாளமும், சிறிலங்காவும் சீனாவின் நண்பர்கள், அந்த அரசுகளின் பாதுகாப்பிற்கு நாம் ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம். இந்த இரு நாடுகளினதும் அரசியல் உறுதித்தன்மையை பேணுவது சீனாவின் கடமை. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்து, அவர்களது தலைவர் வே.பிரபாகரனை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சீனா ஆதரவுகளை வழங்கும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.