Saturday, April 18, 2009

ஐ.நா. பணியாளர்களை நடமாட அனுமதிக்கவும்: சிறிலங்காவுக்கு ஐ.நா. கடிதம்

[சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009] வவுனியாவில் உள்ள தடைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது பணியாளர்களை நடமாட அனுமதிக்குமாறு சிறிலங்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடிதத்தினை அனுப்பியிருப்பதாக அந்நாட்டின் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெள்கிக்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐ.நா.வின் சிறிலங்காவுக்கான பிரதிநிதியும் மனிதாபிமான நடவடிக்கைகளின் இணைப்பாளருமான நீல் பூனேயிடம் இருந்து எமக்கு கடந்த புதன்கிழமை கடிதம் கிடைத்திருக்கின்றது. முகாம்களில் தங்கியுள்ள மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படை அதிகாரிகளுடன் அமைச்சின் அதிகாரிகள் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். இதனிடையே முகாம்களில் உள்ள ஐ.நா.வின் பணியாளர்களை நடமாட அனுமதிக்குமாறு ஐ.நா. சிறிலங்கா அரசை பல தடவை கோரி வந்ததாக ஐ.நா.வின் பேச்சாளர் பார்ஹான் ஹக் நியூயோர்க்கில் தெரிவித்திருந்தார். ஆனால் தமக்கு அதிகாரபூர்வமான கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் ஐ.நாவின் 11 பணியாளர்கள் அவர்களின் குடும்பங்களுடன் தங்கியிருப்பதனை ஐ.நா. அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.