[சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009] வன்னி போர் நிலைமைகள் தொடர்பான செய்திகள், வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது அவதானம் தேவை என கொழும்பில் உள்ள சில அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிகின்றன. அன்பான முறையில் இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதாக சில அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் தங்களை அழைத்து பேர் செய்திகள் குறித்த விடயத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என அன்பாக கேட்டுக்கொண்டதாகவும் போர் செய்திகள் தேவை என்றால் சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். குறிப்பிட்ட சில அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டமை தொடர்பில் தங்கள் செய்தி நிறுவனங்களை தவிர வேறு எங்கும் முறையிடவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Saturday, April 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.