[வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] வன்னியில் போர் நிலை தீவிரமடைந்து, தமிழகத்திலும் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருக்கும் நிலையில் இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை கொழும்பு செல்கின்றனர். அனைத்து வகையான போர் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அழுத்தம் கொடுப்பதற்காகவே இவர்கள் இருவரையும் இந்திய அரசாங்கம் அவசரமாக கொழும்புக்கு அனுப்பிவைப்பதாக புதுடில்லியில் அரசாங்க வட்டாரங்கள் இன்று வியாழக்கிழமை இரவு தெரிவித்தன. கொழும்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கும் இவர்கள் வடபகுதியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக இந்தியாவின் கவலையைத் தெரியப்படுத்துவதுடன், உடனடிப் போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. வடபகுதியில் உருவாகியிருக்கும் மோசமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினால் இன்று இரவு கூட்டப்பட்ட அவசர உயர்மட்ட ஆலோசனக் கூட்டத்திலேயே இது தொடர்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் இறுதியில் இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் மேனன், நாராயணன்ஆகியோரும் கலந்துகொண்டனர். நாளை கொழும்பு செல்லும் நாராயணனும், மேனனனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
Friday, April 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.