[திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள நோர்வே தூதுவரை வெளியேறுமாறும் நோர்வே தூதரகத்தை மூடிவிடவேண்டும் எனவும் வலிறுத்தி தேசிய சுதந்திர முன்னனி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு வோட் பிளேசில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த குருமார் உட்பட நூற்றுக்கணக்கான சிங்கள கடும்போக்காளர்கள் கலந்து கொண்டனர். போரில் தோல்வியடையும் விடுதலை புலிகளின் தலைவர்களை நோர்வே காப்பாற்ற முற்படுகின்றது. மறைமுகமாக புலிகளுக்கு நிதியுதவி செய்கின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். நோர்வே தூதுவர் மற்றும் அனைத்துலக பிரதிநிதிகள் ஆகியோருக்கு விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர். நோர்வேயின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதப்பட்ட வாசக அட்டைகளும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் காணப்பட்டன. விமல் வீரவன்ச உட்பட தேசிய சுதந்திர முன்னனியினதும் ஹெல உறுமயவினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நோர்வே தூதரக வளாகத்திற்குள் சென்று அதிகாரி ஒருவரிடம் மனுவினை கையளித்தார். நோர்வேயில் உள்ள சிறிலங்கா தூதரகம் தாக்கப்பட்டமை குறித்து துரிதமாக விசாரணைகள் தாமதமடைவதாகவும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தூதரகத்தின் இரண்டாம் நிலை இராஜதந்திரி ஒருவரே மனுவைப் பெற்றுக்கொண்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Monday, April 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.