Thursday, April 23, 2009

இலங்கை தொடர்பான தனது அறிக்கையை தெரிவிக்க விஜய் நம்பியார் முன்னர் மறுப்பு; பின்னர் இணக்கம்

[வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலை தொடர்பாக ஆராய்வதற்கு சிறிலங்காவுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்த போதும் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக நம்பியார் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது அங்கு பலத்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளில் ஒரு நாடு நம்பியாரின் இந்த நிலைப்பாட்டை நேரடியாக எதிர்த்திருந்தது. அதன் பின்னர் நேற்று மீண்டும் நடைபெறவிருந்த அதிகாரபூர்வமற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நம்பியார் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட நம்பியார் இந்தியாவுக்குச் சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாதான் நம்பியாரின் செயற்பாடுகளின் பின்னனியில் செயற்படுவதாக நம்பப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.