[திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009] பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் சனிக்கிழமை (18.04.09) தலைநகர் பரிசில் ஒன்றுகூடவுள்ளனர். இந்த ஒன்றுகூடலில் ஈழத் தமிழ்ச் சமூகம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும் பிரெஞ் வாழ் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் விருப்பத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரசின் இன அழிப்புப்போர் உச்சம் பெற்றும் அனைத்துலக அரங்கில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சிப் போராட்டங்கள் தீவிரமுற்றும் இணைத்தலைமை நாடுகளும், ஐ.நா. அமைப்பும் அக்கறையை வெளிப்படுத்தும் இன்றைய சூழலில் பிரான்சில் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இப்பேரவையை கூட்டியிருப்பது முக்கியத்துவமாகின்றது. பிரான்சில் பதிவு பெற்றிருக்கும் சமூக நலன்பேண் சங்கங்களின் இரு பிரதிநிதிகள் இப்பேரவையில் கலந்துகொள்ளலாம் எனவும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இக்காலகட்டத்தில் சங்கங்கள் தமது கடமையாகக்கொண்டு இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். கலந்து கொள்பவர்கள் தமது பதிவுகளை மேற்கொள்ளவும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளவும் பின்வரும் இலக்கங்களான 06 14 11 46 10 அல்லது 06 12 72 87 12 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Monday, April 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.