[சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009] பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய இருவரில் ஒருவர் நேற்று நள்ளிரவு தொடக்கம் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறும் சந்திப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை தந்து சந்திப்பை நடத்தியிருக்கின்றார். இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பிற்கு செல்ல வேண்டிய காரணத்தால் சிவதர்சன் சிவகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசின் சார்பில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். அத்துடன் பிரித்தானிய அரசாங்கத்தால் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கைப் பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவினருடன் பிரித்தானிய தமிழ் இளையோர் இணைந்து செயற்படுமாறும் அவர் தெரிவித்திருந்தார் என்று கூறப்படுகின்றது. இதேவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியையும் இறக்குமாறு பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடியும் இறக்கப்பட்டுள்ளதுடன் - ஒலிபெருக்கிகளில் முழக்கமிடுவதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் நிறுத்தியுள்ளனர். அதேநேரம் பிரித்தானியாவில் இன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது. பிரித்தானியாவின் எம்பாக்மென்ட் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கி ஹைட் பார்க் என்ற இடத்தை சென்றடையும் என்றும் அங்கு பிரித்தானிய அரசுக்கான மனு கையளிப்பு வைபவம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்பவர்கள் தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை தமது கைகளில் ஏந்தியிருப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையிலேயே நேற்று இரவு நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடிகள் இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Saturday, April 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.